திருப்பத்தூர் மாவட்டம் தர்மராஜா கோயில் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சுபாஷ் (55). இவரது மனைவி விஜயலட்சுமி (45). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர், திருப்பத்தூர் கோட்டை தெருவிலுள்ள சிவன் கோயிலில் உதவியாளராக சேவை செய்துவந்தார். மேலும், சுபாஷ் வழக்கமாக காலை நேரத்தில் திருப்பத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
அதேபோல் இன்று (நவ.16) காலை நடைபயிற்சிக்காக வந்த சுபாஷ், இரட்டைமலை சீனிவாசன் பேட்டைப் பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள இரண்டாவது ரயில்வே தண்டவாளத்தில், முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர், சுபாஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் இடத்தகராறால் துப்பாக்கிச் சூடு: தொழிலதிபர் கைது!