ETV Bharat / state

பாலியல் வன்புணர்வு செய்து பெண் கொலை.. 24 மணிநேரத்தில் குற்றவாளி கைது.. - திருப்பத்தூர் பெண் கொலை வழக்கு

வாணியம்பாடி அருகே காட்டு பகுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த குற்றவாளியை 24 மணி நேரத்துக்குள் கைது செய்த தனிப்படை காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Etv Bharat மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 10:55 PM IST

Updated : Sep 4, 2023, 2:58 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகேவுள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 55 வயது பெண். இவர் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இரு தினங்களுக்கு முன்பு காலை 100 நாள் திட்டம் வேலைக்குச் சென்று அன்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டிற்கு விறகு எடுத்துவர அருகில் உள்ள காப்புக் காட்டு பகுதிக்குச் சென்றவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனை அறிந்து அவரது உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று முன்தினம் (ஆக.31) பிற்பகல் காட்டு பகுதி வழியாக சென்ற நபர் ஒருவர், காட்டில் பெண் சடலம் இருப்பதாக ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விசாரணை நடத்தினார். பின்னர் கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணின் உறவினரான 35 வயது நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அந்த பெண் தன்னுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நண்பரை காட்டு பகுதிக்கு வரச் சொல்லிவிட்டு தனியாக காட்டை நோக்கி விறகு வெட்ட சென்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் தனியாக காட்டை நோக்கி செல்வதைக் கண்ட நபர் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால், காட்டு பகுதிக்குள் அப்பெண்ணின் காதலன் வராததால் இதனைப் பயன்படுத்திக் கொண்ட நபர், தன் உறவினரான பெண்ணுக்கு உதவி செய்வது போல் அவருடன் சேர்ந்து விறகு வெட்டும் பணியில் ஈடுபாட்டார்.

பின்னர், பெண்ணிடம் மற்றவர்களுக்கு சந்தோஷம் கொடுப்பது போல் தன்னையும் சந்தோஷமாக வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அப்பெண் மறுத்துள்ளார். மீறி தொந்தரவு கொடுத்தால் ஊரில் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நபர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்துள்ளார். பின்னர், இது தொடர்பாக அந்த பெண் உறவினர்களிடம் கூறிவிட்டால் ஊரில் தலை காட்ட முடியாது என எண்ணி, அப்பெண்ணை நடு காட்டில் வைத்து அந்த நபர் கொலை செய்விட்டதாக போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அளித்த வாக்கு மூலம் அடிப்படையில், வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்ததோடு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதில் இருந்த கம்பல், தாலி ஆகியவற்றையும் காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கொலை சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் கொலையாளியை தனிப்படை காவல் துறையினர் பிடித்துள்ளனர். இதனால் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், குற்றப்பிரிவு ஆய்வாளர் பழனி ஆகியோர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர்களை பாராடுகிறேன்.

கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல் ஆலங்காயம் காவல் நிலையத்தில் காப்பர் வயர் திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்க நகைகள், செல்போன் ஆகியவற்றை மீட்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: பழங்குடியின பெண்ணை தாக்கி நிர்வாண ஊர்வலம்; தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!

Last Updated : Sep 4, 2023, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.