திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (50). இவரது மகன் பிரேம்குமார் (24), அவரது நண்பர் ராஜ் கிரண் (27) இருவரும் ஆம்பூர் நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்தாகக் கூறி ஆம்பூர் நகர காவல் துறையினர் நேற்று (செப்.21) இரவு கைதுசெய்து விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (செப்.22) காலை காவல் நிலையம் வந்த மணி, சிலரின் துாண்டுதலின் பேரிலேயே காவல் துறையினர் தனது மகனை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளதாகவும், உடனடியாக தனது மகனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
மேலும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதைக்கண்ட அங்கிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி, முதலுதவிக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதையும் படிங்க:சொத்து தகராறு: சாலையில் நடந்து சென்ற பெண் வெட்டிக் கொலை!