திருப்பத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே கடந்த 11 ஆம் தேதி ஜாமீன் பெற பேரறிவாளன் புழல் சிறைக்கு சென்ற போது உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆவணம் தங்களுக்கு வரவில்லையென புழல் சிறை துறையினர் தெரிவித்ததையடுத்து பேரறிவாளன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் ஜாமீன் பெற உரிய ஆவணங்களுடன் இன்று(மார்ச்.15) புழல் சிறைக்கு பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை