முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, 90 நாள்கள் பரோல் எனப்படும் சிறை விடுப்பு கேட்டு, அவரது தாயார் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் சிறைத்துறை தரப்பில் பேரறிவாளனுக்கு பரோல் தர முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தின் சிறைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, இன்று (அக்.09) காலை சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து, 30 நாள்கள் பரோலில் மூன்றாவது முறையாக வெளியே வந்த பேரறிவாளனை, ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நண்பகலில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
கரோனா தொற்று காரணமாக பேரறிவாளனைக் காண வெளியாட்களுக்கு அனுமதியில்லை எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்எல்ஏ மனைவி ஆஜர்...!