பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு சிறுநீரகத் தொற்று, நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (நவ.07) திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரகதம் தனியார் மருத்துவமனைக்கு காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவருக்கு 90 நாள்களுக்கு பரோல் அனுமதி கோரியிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த வாரம் 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து அக்டோபர் 9ஆம் தேதியன்று சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவளானை சிறைத்துறை அலுவலர்கள் காவல் துறையினர் பாதுகாப்புடன், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து 30 நாள்கள் பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு மேலும் 15 நாள்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சம்பளம் கேட்ட ஹோட்டல் தொழிலாளியை சிறுநீர் அருந்த வைத்த உரிமையாளர்!