ETV Bharat / state

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திருப்பத்தூர்: ஒரு வருடமாக குடிநீர் கேட்டு பல முறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
author img

By

Published : May 2, 2020, 10:53 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி கலந்துகொண்டு 550 நபர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வட்டார வளர்ச்சி அலுவலத்திறக்கு பின்புறம் உள்ள பாரத கோயில் தெரு, அம்பேத்கர் நகர், இருளர் காலனி போன்ற பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு, தங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வருடமாக முறையான குடிநீர் வசதி இல்லாத சூழ்நிலையில் வாழ்ந் துகொண்டிருப்பதாக தெரிவித்தனர். பல முறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இரண்டு முறை சாலை மறியல் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி எஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பொதுமக்கள் தங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்வரை இந்த இடத்தை விட்டுச் செல்லமாட்டோம் என கூறி முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

கரோனா தொற்று பரவி வரும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசு அலுவலகம் எதிரே கூடி, தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததைக் கண்ட சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஊரடங்கில் தலைதூக்கும் தண்ணீர் பிரச்னை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.