ETV Bharat / state

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு அறங்காலவர் பதவி.. கொந்தளித்த மக்கள் சாலை மறியல்! - புதுப்பேட்டை குற்றச் செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த நபரை அறங்காவலராக நியமித்ததை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Etv Bharat ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு அறங்காலவர் பதவி

author img

By

Published : May 13, 2023, 9:30 PM IST

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு அறங்காலவர் பதவி

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன், பழனி. இவர் சில வருடங்களுக்கு முன்பு புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென ஏலச்சீட்டு பணத்தை அபேஸ் செய்துகொண்டு, அதில் பணம் செலுத்தியவர்களை ஏமாற்றிவிட்டு, திருப்பத்தூரில் செட்டில் ஆகியுள்ளார்.

இதன் காரணமாக இன்று (மே 13) புதுப்பேட்டை பகுதி ராஜா வீதி தெருவில் உள்ள திருநாராயணசாமி திருக்கோயிலுக்கு பழனி அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்த ஊர் பொதுமக்கள், திருப்பத்தூர் வழியாக வெலக்கல்நாத்தம் செல்லும் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், அறங்காவலர் பதவியில் இருந்து பழனியை நீக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், நாட்டறம்பள்ளி காவல் துறையினர் மற்றும் தாசில்தார் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக
அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஜெயிலில் சிக்கன் மசாலா குறைவு என கொலை மிரட்டல்; போலீஸ் பக்ருதீன் மீது வழக்குப் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.