திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய வரிகம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் உள்ள வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது..
இந்த ஏரியிலிருந்து உபரி நீர் கடந்த இரண்டு நாள்களாக வெளியேறி வருகிறது. பல்வேறு இடங்களில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணமாக பெரிய வரிகம் இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சாலைகள் முழுவதும் 3 அடி ஆழத்திற்குக் குளம் போல் காணப்படும் நிலையில் சிறுவர்கள் சாலையில் செல்லும் உபரி நீரில் நீச்சல் அடித்து வருகின்றனர்.


சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேற்பட்ட இந்த மறியலால் அப்பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து தற்காலிகமாகக் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி - கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல்!