ETV Bharat / state

'தேர்தல் ஆணையம் ஊராட்சி தலைவராக அறிவித்தும் பணி செய்யவிடாமல் தொந்தரவு' - ஊராட்சி மன்ற தலைவி - Complaint that election commission declared as Panchayat president

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஊராட்சி மன்ற தலைவராக அறிவித்தும் ஊரில் உள்ள சிலரின் எதிர்ப்பால் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்க முடியாமல் இருப்பதாக நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவி
ஊராட்சி மன்ற தலைவி
author img

By

Published : Jul 9, 2022, 6:11 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்நிலையில் இத்தேர்தலில் வாக்களித்த வந்த நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டியன் தனது வார்டில் வாக்களித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசியதாவது, 'நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் கிராமத்தில் உள்ள சிலரின் காழ்ப்புணர்ச்சியால் தலைவராக பதவியேற்காமல் மக்களுக்கு சேவை முடியவில்லை உள்ளேன்' என்று தெரிவித்தார்.

இந்துமதி பாண்டியன் தம்பதியினர்
இந்துமதி பாண்டியன் தம்பதியினர்

இந்துமதி பாண்டியன், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக தேர்தலில் யாரும் போட்டியிடாததால் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலைவாழ்மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பட்டியலினத்தவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால், கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை முழுவதும் புறக்கணித்தனர். மேலும் தலைவராக வெற்றி பெற்றவர் பதவியேற்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்த நிலையில், அவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தலை தவிர்த்து நாயக்கனேரி ஒன்றியகுழு வார்டு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

சாதியைக் காரணமாகக் காட்டி ஊராட்சி தலைவர் பணியை செய்யவிடாமல் தடுப்பதாகப் புகார்

இதையும் படிங்க: பெண்ணிடம் பேசியதால் துடிக்க துடிக்க வெட்டப்பட்ட பட்டியலின இளைஞரின் கால்; முறையான விசாரணை நடத்தக் கோரி டிஜிபியிடம் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.