திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதாவின் கணவர் கணேசன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 6 ஆம் தேதி கோயமுத்தூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
அப்போது குற்றப்பிரிவு காவலர்களிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கணேசனின் ஆதரவாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்து கணேசன் கையிலிருந்த கை விலங்கை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்துத் தூக்கி எறிந்தன.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த கணேசனை சிறப்பு தனிப்படை காவலர்கள் இன்று (டிசம்பர் 9) கைது செய்து விசாரணைக்காக உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கணேசனுடன் தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைதுசெய்ய வந்த காவலர்களுக்கு அடி உதை