திருப்பத்தூர்: திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் தினசரி ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு கடத்தி வரப்படுவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று (மே. 24) ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பினார்.
அதன் அடிப்படையில் சென்னை குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி ஸ்டாலின் தலைமையில், வேலூர் மண்டல போலீஸ் அலுவலர் சதீஷ் உள்ளிட்ட குழுவினர் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஆந்திர மாநிலத்திற்கு அரிசி கடத்தப்படுவது குறித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி ஸ்டாலின் கூறுகையில், "ஆந்திர மாநிலத்திற்கும், கர்நாடக மாநிலத்திற்கும் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் குறித்து முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்பூரில் வாகனம் மோதி மான் பரிதாபமாக உயிரிழப்பு!