திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுனாமுத்தூர் ஊராட்சி, சின்னபசலிக்குட்டை பகுதியில் வசிப்பவர், மாராகவுண்டர் மகன் சின்னகண்ணு (55). இவர் அதிகாலை 4 மணி அளவில் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள கழிவறைக்கு காலைக்கடன் கழிக்க எழுந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கழிவறையின் அருகில் உயர்மின் அழுத்தம் உள்ள மின்சாரக்கம்பி அறுந்து தொங்கிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் ஏதோ தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்து, அதை அப்புறப்படுத்த கையை வைக்கும்பொழுது மின்சாரம் தாக்கி கம்பியை பிடித்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்து கொண்டிருக்கும்பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து விழக்கூடிய நிலையில் இருந்த மின்சாரக்கம்பியை குறித்து பலமுறை வெங்கலாபுரம் மின்சார அலுவலகத்தில் புகார் அளித்தும்; அதைக்கண்டு கொள்ளாமல் மின்சாரத்துறை அலுவலர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதன் விளைவாகவே தற்பொழுது விபத்து ஏற்பட்டு ஒரு உயிர் பலியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க:தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ...மகள் கண்முன் உயிரிழந்த தந்தை