வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர், தனது வீட்டில் தங்கியிருந்த உறவினரான 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் வயிறு வீக்கம் அடைவதை கண்ட பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் தலைமறைவாக இருந்த கால் டாக்சி ஓட்டுநரை கைது செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கரோனா உறுதிசெய்யப்பட்டதால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!