திருப்பத்தூர் மாவட்டம் பாம்பாட்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பொன்னுசாமி (60). இவர் சின்ன கண்ணாலப்பட்டியில் தனது உறுவினரின் இறுதி சடங்கிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

பின்னர் வீடு திரும்பும் போது சின்ன கண்ணாலப்பட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த டாட்டா ஏசி வாகனம் இவர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பொன்னுசாமி இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பியோடினார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கார் மீது லாரி மோதி விபத்து: காரில் சிக்கிய இருவர் மீட்பு..!