கரோனா வைரஸ் பெரும்தொற்றிலிருந்து தற்காத்துக்-கொள்ளும்விதமாக மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
வேலூர் நகரில் சாலையோரம் உள்ள ஆதரவற்றோருக்கு உணவளிக்குமாறு தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, சாலையோரம் என சுற்றித்திரிந்த ஆதரவற்றோர், மற்றுத்திறனாளிகள் என சுமார் 300 பேருக்கு இலவச உணவு மற்றும் குடிநீர் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் இவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவு கிடைக்காமல் சிரமப்பட்ட நிலையில், ஆட்சியர் உத்தரவின்பேரில் உணவு வழங்கப்பட்டதற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கிருமிநாசினி, முகக்கவசம் - அதிக விலைக்கு விற்றால் சீல்