ETV Bharat / state

குடியிருப்புகளை காலி செய்ய கூறி நோட்டீஸ் - கதறும் மக்கள்

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புகளை காலி செய்ய கூறி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அப்பகுதி மக்கள் தங்களை விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் என கூறி வயிற்றில் அடித்துக் கொண்டு கதறி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 10, 2022, 7:15 PM IST

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டபாணி கோயில் தெரு, சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகர் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புகளை காலி செய்ய கூறி நோட்டீஸ் அனுப்பியது. அதன் காரணமாக திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தண்டபாணி கோயில் தெருவில் சுமார் 80 வருட காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியையும் அகற்றக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள், அரசு சார்பில் மாற்று இடம் கொடுத்த பின்பே காலி செய்வதாக கோரிக்கை வைத்து வைத்தனர்.

ஆனால், அரசு சார்பில் நேற்று வெளியிட்ட விளம்பரத்தை கண்டு மாற்று இடம் கொடுக்கும் முன்பே வீட்டை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறுவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

அப்போது ஆவேசப்பட்ட பகுதி மக்கள், “தமிழ்நாடு அரசு எதாவது உதவி செய்ய வேண்டும் எங்களுக்கு இந்த இடத்தை காலி செய்து விட்டால் வேறு இடமில்லை. எங்களுடைய பிணத்தை தாண்டி தான் எங்களுடைய வீட்டை இடிக்க முடியும்.

விஷம் வாங்கி கொடுத்து எங்களை கொன்று விட்ட பின்பு எங்களது இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என வயிற்றில் அடித்துக் கொண்டு கதறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆதங்கத்தை வெளிப்படுத்திய மக்கள்

இதையும் படிங்க: கும்பகோணத்தில் நூதன முறையில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.