கரோனா முதல் அலை பரவியபோது, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி சித்த மருத்துவமனையில் கரோனா சிறப்பு மையம் தொடங்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் விக்ரம் குமார், பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.
இங்கு 150 நாள்களில் 625 கரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.
மீண்டும் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 38 நபர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
இம்முறையும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. குறிப்பாக நோயாளிகளுக்கு இஞ்சிச் சாறு, கபசுரக் குடிநீர், சுக்கு மல்லி தேநீர், ஆடாதொடை குடிநீர், அதிமதுர கஷாயம், நாட்டு கோழி சூப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
அதோடு நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனால் இந்த மையத்திற்கு பலர் நம்பிக்கையுடன் வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையமாக மாறும் தனியார் பள்ளி