திருப்பத்தூர்: நாட்றம்பள்ளியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, கரோனா நோய் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. பள்ளியின் விளையாட்டு மைதானத்தை அப்பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு சுமார் 15ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஊர் பொதுமக்கள், வயதானவர்கள் என பலர் இம்மைதானத்தை நடைபயிற்சிக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர் இளவரசி, உதவி தலைமையாசிரியர் ரவிவர்மன் ஆகியோர் நேற்று(ஜூலை 18) திடீரென பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஏர் கொண்டு உழுதுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளியின் பழைய மாணவர்கள், ஊர் பொதுமக்கள் உதவித் தலைமையாசிரியர் ரவிவர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விளையாட்டு மைதானத்தை யார் உத்தரவின் பேரில் நீங்கள் ஏர் கொண்டு உழுதுள்ளீர்கள் என கேள்விஎழுப்பினர்.
அதன்பின் இளைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சூரியகுமாரிடம் உழுத மைதானத்தை திரும்பவும் சரி செய்து தருமாறு மனு அளித்தனர். இதனை அறிந்த சூரியகுமார் உடனடியாக தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் பள்ளியின் மைதானத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சரி செய்து கொடுத்தார்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் விரைவில் அரசு தொழிற்சாலை - கதிர் ஆனந்த்