ETV Bharat / state

நூறு நாள் வேலை, பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: போட்டு உடைத்த தணிக்கை அலுவலர்

வாணியம்பாடி அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் சுமார் நான்கு லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகக் கணக்குத் தணிக்கை அலுவலர் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டு உடைத்த தணிக்கை அலுவலர்
போட்டு உடைத்த தணிக்கை அலுவலர்
author img

By

Published : Nov 15, 2021, 9:27 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர் சுமார் நான்கு லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகக் கணக்குத் தணிக்கை அலுவலர் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் 2019-20ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பசுமை வீடு திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணிகள் குறித்து தெரிவிப்பதற்குக் கணக்குத் தணிக்கைக் குழு அலுவலர் பொன்னடி தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஊராட்சியில் 2019-20ஆம் ஆண்டில் 30 லட்சத்து 72 ஆயிரத்து 292 ரூபாய் மதிப்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற 19 விதமான பணிகள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டதில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மூன்று லட்சத்துக்கான பணிகள் கணக்கில் வரவில்லை எனவும்,

நிம்மியம்பட்டு குட்டை பகுதியில் 250 மரக்கன்று வைக்கப்பட்டது உள்ளிட்ட சுமார் நான்கு லட்சம் ரூபாய்க்கான கணக்குகளில் முறைகேடு செய்த ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளர் சதீஷ், அப்போதைய திமுக ஊராட்சி செயலர் ஞானமூர்த்தி ஆகியோர் முறைகேடு செய்துள்ளதாகவும்,

வாணியம்பாடி
வாணியம்பாடி

அதேபோல் 100 நாள் வேலைக்கு வராமல் 12 பேரின் பெயரில் ஏழாயிரத்து 710 ரூபாய் பணித்தள பொறுப்பாளர்கள் திமுகவைச் சேர்ந்த மோகனா, சென்ராயன் முறைகேடு செய்துள்ளதாகவும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கணக்கு தணிக்கை அலுவலர் வெளிப்படையாகத் தெரிவித்ததால் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: துப்பாக்கிக் குண்டுக்கு இரையான 26 உயிர்கள்.. நீதி விசாரணை கோரி மாவோயிஸ்ட்கள் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.