ETV Bharat / state

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் மாதந்தோறும் ரூ.88 நுகர்வோர் நிலை கட்டணம்! வெளியான 'திடுக்' தகவல்! - SMART METER

வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் மாதந்தோறும் ரூ.88 நிலைக் கட்டணமாக நுகர்வோர் செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தலைவர் ஜெயசங்கர் பேட்டி
மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தலைவர் ஜெயசங்கர் பேட்டி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 7:05 PM IST

சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது

மின்வாரியம் பொதுத்துறையில் 3 கோடியே 33 லட்சம் மின்நுகர்வோர்களைக் கொண்ட மிகப் பெரிய சேவை நிறுவனம். இந்த நிறுவனத்தில் மின்நுகர்வோர்களுக்கு சேவை செய்வதற்காக மின்வாரிய பணியாளர்கள் 24 மணி நேரமும் உழைக்கிறார்கள். களப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மின்வாரியத்தில் ஆரம்பநிலை காலிப்பணி இடங்கள் 44,000-மும். ஒட்டு மொத்த காலிப்பணியிடங்கள் 62,000 ஆக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி மின்வாரிய தலைமையகத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய மினதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்கள் நேரடியாக இல்லையென்றும் அவர்களை நிரந்தரப்படுத்த வாய்ப்பு இல்லையென்றும் அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்த அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் முதல்வரின் அனுமதி பெற்று சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சர், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். எனவே அமைச்சரின் அறிவிப்பை திரும்ப பெற்று ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு மின்வாரிய நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை TOTEX முறையில் தனியாருக்கு வழங்காமல் CAPEX முறையில் கேரளாவைப் போல தமிழ்நாடு மின்வாரியமே பொருத்திட வேண்டும். மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென தொடர்ச்சியாக தொழிற்சங்கம் வற்புறுத்திய நிலையில் 10,260 பேரை பல்வேறு பதவிகளுக்கு எடுப்பதாக அறிவித்து ஆண்டுகளும் கடந்து விட்டன. விடுப்பட்ட கேங்மேன் பணியாளர்கள் 5,000-ம் பேரை விரைவில் எடுப்போம் என்று சொன்ன தமிழக அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். 1.12.2019 -க்கு பின் 16.5.2023-க்கு முன் மின்வாரிய பணியில் இணைந்த கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதம் ஊதிய உயர்வு வேண்டும்.

அவுட்சோர்சிங், மறுபணிநியமனம் செய்வதை கைவிட வேண்டும். மின்வாரிய பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ அரசும், மின்வாரிய நிர்வாகமும் முன் வராத நிலையில் தஞ்சாவூரில் பிப்ரவரி 7 மற்றும் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து தொடர் போராட்டங்களை நடத்திட உள்ளோம்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து வரும் தமிழ்நாடு அரசு, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் நுகர்வோர் மாதம் 88 ரூபாய் நிலை கட்டணமாக செலுத்த வேண்டும். 7 ஆண்டுகளில் மீட்டர் விலையை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு நுகர்வோர்கள் தள்ளப்படுவார்கள். பல்வேறு மாநிலங்களில் தோல்வி அடைந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்த கூடாது.

பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக மின்சாரத் துறை ஊழியர்கள் கடும் வேலைப்பளுவில் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் ஒரு வாரம் போராட்டம் நடத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும். இதற்கு கடந்த காலம் வரலாறுகள் உண்டு. எனவே ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.