ETV Bharat / state

உதவுவது போல் நடித்து மூதாட்டியிடம் 10 சவரன் நகை கொள்ளை: சிசிடிவி வெளியீடு - Jewel theft from old woman

வாணியம்பாடியில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 10 சவரன் தங்கநகை பறித்து சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உதவுவது போல் நடித்து மூதாட்டியிடம் 10 சவரன் நகை கொள்ளை: சிசிடிவி வெளியீடு

author img

By

Published : Nov 27, 2022, 10:23 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வடச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி(69). இவர் நேற்று (நவ.26) பிற்பகல் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து பின் வீடு திரும்பிய போது மருத்துவமனை அருகிலேயே மூதாட்டியிற்கு உதவி செய்வது போல் நடித்த இரு மர்ம நபர்கள் மூதாட்டியிடம் இருந்த 10 சவரன் தங்கநகையைப் பறித்துச்சென்றுள்ளனர்.

இதனையறியாத மூதாட்டி சிறிது நேரத்திற்குப் பின்னர் தனது பையில் வைத்திருந்த தங்கநகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனை அருகில் சென்று வெகுநேரம் தேடியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து மூதாட்டி வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மருத்துவமனை எதிரே இருந்த கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது சிலர் மூதாட்டியிடம் வெகுநேரமாகப் பேசி தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் செல்லும் காட்சிப் பதிவாகியிருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர் சிசிடிவி காட்சிகளின் கொண்டு மூதாட்டியிடம் தங்கநகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உதவுவது போல் நடித்து மூதாட்டியிடம் 10 சவரன் நகை கொள்ளை: சிசிடிவி வெளியீடு

இதையும் படிங்க: கெளரிவாக்கம் நகைக்கடை கொள்ளை வழக்கு... 3 வடமாநில சிறார்கள் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.