திருப்பத்தூர்: ஆம்பூரில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது, 'இந்தியா மற்றும் உலக அளவில் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் போது சந்தேகங்கள் விலகும் என நினைத்தோம், அந்த அறிக்கை தற்போது மேலும் சந்தேகங்களை உள்ளடக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சியின் பவளவிழா வரும் மார்ச் 30ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் நிலையில், அவ்விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
மேலும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் சேர்க்கை தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோவையில் கார் வெடித்த சம்பவம் - இறந்தவர் யார் என்று துப்புகிடைத்தது