திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சியில் குடியரசு தின விழா சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ''கிராம சபைக் கூட்டத்தில் என் முன்பு கொடுக்கப்படும் வாக்குறுதிகளை அதிகாரிகள் ஆகிய நீங்கள் நிறைவேற்றவில்லை என்று சொன்னால், என்னுடைய பச்சை பேனா வேலை செய்யும். பின்னர், பதவி உயர்வில் அனைவரும் பாதிக்கப்படுவீர்கள்'' என்றார்.
மேலும் ''இந்த கூட்டத்தில் கேள்வி கேட்க சசிகலா மற்றும் ஜெயலலிதா பெயரைக் கொண்ட பெண்கள் யாரும் இல்லையா?” என கதிர் ஆனந்த் கேட்டதால் கிராம சபைக் கூட்டத்தில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஒன்றிய குழு பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விஐபி வரிசையில் சீட் இல்லை.. குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்பி!