ETV Bharat / state

எருது விடும் விழாவில் காளைகள் துன்புறுத்தல்.. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. - காளைகள் துன்புறுத்தல்

திருப்பத்தூரில் விதிமுறைகளை மீறி நடைபெற்ற எருது விடும் விழாவில் 30-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

எருது விடும் விழா
எருது விடும் விழா
author img

By

Published : Jan 30, 2023, 8:20 AM IST

எருது விடும் விழா

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தில் மயிலார் பண்டிகையை ஒட்டி, எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் போதுமான பாதுகாப்பு இல்லை என்று கூறிய மாவட்ட நிர்வாகம் மூன்று முறை விழாவை ஒத்தி வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் காவல்துறை மற்றும் வருவாய் துறை பேச்சுவார்த்தை நடத்தி பின்பு எருது விடும் விழா நடைபெற்றது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றி உள்ள பகுதிகள் வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 305-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

பொதுவாக போட்டியின்போது மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து, அதன்பின் வாடிவாசலில் அவிழ்த்து விட வேண்டும். ஆனால், இங்கு அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல மாடுகளை துன்புறுத்தும் வகையில் வாலில் கிளிப் கொண்டும், அதே நேரத்தில் காளைகளை பிடிக்கும் வகையில் விசுவா கையிற்றினை வயிற்றில் கட்டியும் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

குறிப்பாக வாடிவாசலுக்கு முன்பு தேங்காய் நார் போட்டிருக்க வேண்டும். அதுவும் பின்பற்றப்படவில்லை. இப்படி பல விதிமுறைகளை பின்பற்றாமல் விழா குழு எருது விடும் விழாவை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிகிறது. இதனால் காளைகள் துன்புறுத்தப்பட்டன. 30-க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தனர்.

இதையும் படிங்க: எருது விடும் விழாவில் இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் மீது குற்றச்சாட்டு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.