திருப்பத்தூர் மாவட்டம் பெரியாகரம், சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவரது மகன் விக்னேஷ் (18) கஞ்சா, மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் இன்றும், விக்னேஷ் போதையில் பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவரை, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் தாய், தந்தையை கொன்ற மகன்!