திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 70 ஆண்டு காலமாக வீடு கட்டி வாழ்ந்துவருகின்றனர்.
அதுமட்டுமின்றி மின்னிணைப்பு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் குடியிருக்கும் பகுதி அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது. இதனால், அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் விரைவாக நடவடிக்கை எடுத்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும் 43 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அடங்கிய மனுக்களை அளித்தார்.
இந்நிகழ்வின்போது முன்னாள் கவுன்சிலர் அருணாச்சலம், ஊர் தலைவர்கள் அனுமன், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியரின் உதவியாளர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.