ETV Bharat / state

பெண் மின்பொறியாளரின் 10 பவுன் செயின் பறிப்பு.

author img

By

Published : Mar 12, 2020, 2:06 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே உதவி மின்பொறியாளர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

miscreants robbed 10 sovereign gold chain of eb employee at jolarpet
பெண் மின்பொறியாளரின் 10 பவுன் செயின் பறிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பால்நாங்குப்பம் அடுத்த ஐஸ்வர்யா கார்டன் 1வது தெருவில் வசித்துவரும் விஜயகுமார் மனைவி ஷர்மிளா(32). இவர் புதுப்பேட்டை மேற்கு மின்பகிர்மான வெலக்கல்நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் மின்சார அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்றிரவு 8 மணியளவில் வழக்கம்போல் பணியிடத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது அவரது வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

சம்பவம் குறித்து ஷர்மிளா ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் தப்பியோடிய 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.