திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் அலுவலகத்தில் புதுபூங்குளம், ஏகே மோட்டூர், பகுதியைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சொந்தமாக வீடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை- எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 101 ச.மீ பரப்பு கொண்ட சுமார் 29,795 ரூபாய் மதிப்பில் உள்ள பட்டாக்களை 42 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வேண்டும் - ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் மனு!