தமிழ்நாட்டில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்ற நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.
பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களே அதிக வாக்குகளுடன் முன்னிலை வகித்துவருகின்றனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.சி. வீரமணி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வியைத் தழுவினார்.
இரண்டாயிரத்து 246 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.