ETV Bharat / state

ஆண்டியப்பனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு? அமைச்சர் கே.சி.வீரமணி பதில் - tirupathur district news

திருப்பத்தூர்: ஆண்டியப்பனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உத்தரவிட்ட பின் தண்ணீர் திறக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

ஆண்டியப்பனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு?

author img

By

Published : Dec 5, 2020, 5:28 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணை சுமார் சுமார் 112.20 அடி உயரம் கொண்டது.

வடகிழக்கு பருவமழையால் இந்த அணை இன்று (டிச.5) காலை நிரம்பியது. இதனை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு சுற்றுலா வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் சிவன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்ததாவது, "ஆண்டியப்பனூர் நீர்தேக்கத்திலிருந்து வரும் தண்ணீர் குரிசிலாப்பட்டு அணைக்கட்டு அருகே பாம்பாற்றில் இணைந்து பெண்ணையாற்றில் கலக்கிறது. சாஹிப் கால்வாய் மூலம் ஒன்பது ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே கால்வாய் மூலம் 2,970 ஏக்கர் புன்செய் நிலமும், ஏரிகள் மூலம் 2,055 ஏக்கர் நன்செய் நிலமும் பாசன வசதி பெறும்.

ஆண்டியப்பனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உத்தரவிட்ட பின் தண்ணீர் திறக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: அமராவதி அணை திறப்பு:கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.