திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சந்திரன் நகர்ப்பகுதியில் வசிப்பவர், மாதையன். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகன் கார்த்திக் (26), கடந்த பத்து வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கார்த்திக் இன்று (அக்.02) அதிகாலை சுமார் 6.30 மணியளவில் புதுப்பேட்டை ரோடு டிஎம்எஸ் பள்ளி அருகே திருவனந்தபுரத்திலிருந்து திருப்பத்தூர் வழியாக சென்னையை நோக்கி சென்ற வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயிலில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் துறை சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் போலீசையே மிரட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளியின் கூட்டாளி