திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (35). இவர் சாராய வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மாதம்மாள் (30) என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மாதம்மாள் சுதாகரைப் பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்றார். சுதாகர் பலமுறை தன்னுடன் சேர்ந்து வாழ மனைவியை அழைத்தும் வரவில்லை. இதனால் மாதாம்மாளை கணவர் சுதாகர் அடித்ததாக தெரிகிறது.
இதையடுத்து மாதாம்மாள் தந்தை சீனிவாசன் இன்று (ஏப்ரல்.23) காலை மது போதையில் மருமகன் சுதாகரை சரமாரியாக வெட்டினார். உடனே பொதுமக்கள் சுதாகரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது மருமகனை கொலை செய்த மாமனார் சீனிவாசனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வரதட்சனைக் கொடுமை செய்த கணவன், மாமியார் கைது