ETV Bharat / state

உதவிக்கு யாருமின்றி பறிபோன உயிர்! - திருப்பத்தூர் செய்திகள்

திருப்பத்தூர்: காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்று உதவிக்கு யாரும் இல்லாததால் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death
death
author img

By

Published : Oct 31, 2020, 1:50 PM IST

ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு, முகத்தில் காயங்களுடன் பற்கள் உடைந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல கூறியுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அனுப்ப ஏற்பாடுகள் செய்த நிலையில், அவருடன் மருத்துவமனைக்குச் செல்ல யாரும் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர், காயங்களுடன் ஆம்பூர் நகராட்சி சாலை ஓரத்தில் படுத்துள்ளார். வெகு நேரமாகியும் அவர் அதே இடத்தில் படுத்திருந்தது கண்டு, அவ்வழியே சென்றவர்கள் ஆம்பூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் வந்து பார்த்தபோது அந்த நபர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. பின்னர் உடலை உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் பெங்களூரு வான்ச்வாடி பகுதியைச் சேர்ந்த அஜீஸ் (45) என்பதும், அங்கு தினக்கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதியில் உள்ள தனது மனைவியை காண வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், அப்பகுதியிலேயே சுற்றித்திரிந்த அவர், நிகழ்வன்று மது போதையில் கீழே விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு வந்தபோது உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.