திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் திட்ட இயக்குநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில், எப்போதும் வீட்டில் தனிமையாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பாலகிருஷ்ணன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது வீடு முழுவதும் மிளகாய் பொடியை தண்ணீரில் கரைத்து பல்வேறு பகுதிகளில் தெளித்துவிட்டு, பாலகிருஷ்ணனைத் தலை மற்றும் கை பகுதிகளில் பலமாக அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த. பிறகு இதுகுறித்து விசாரணையில் அவரது மகன் சேதுராமன் தான் தந்தையைக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதாவது பாலகிருஷ்ணனின் மகன் சேதுராமன் சில நாட்களாக மருந்தகம் வைக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், தர மறுத்த தந்தை பாலகிருஷ்ணனைத் தலையில் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டு வீடு காவல்துறையினரிடம் நாடகமாடியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் சேது ராமனை கைது செய்து, இக்கொலையில் யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரணை செய்து வருகின்றனர்.