திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கரோனா நோயின் தாக்கம் அறியாத சில தொழிற்சாலை உரிமையாளர்கள் தொழிற்சாலைகளை திறந்து ஆள்களை வைத்து வேலை செய்துகொண்டிருந்த தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்ரமணி, வட்டாட்சியர் சிவ பிரகாசம் ஆகியோர் சீல் வைத்தனர்.
இதேபோல், சாலையில் உள்ள சில தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஆள்களை வைத்து வேலை செய்துவருவதாக நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்க்கு இன்று தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஊரடங்கு உத்தரவை மீறி திறந்துவைத்திருந்த 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கச்சேரி சாலையில் ஆள்களை வைத்து வேலை செய்துவந்த தனியார் தொழிற்சாலைக்கு நகராட்சி அலுவலர் சிசில் தாமஸ் தலைமையிலான அலுவலர்கள் சீல் வைத்தனர். தொழிற்சாலைகளில் ஆள்களை வைத்துக்கொண்டு வெறுமனே திறந்து வைத்து கொண்டிருந்த தொழிற்சாலைகளில் உள்ள நிர்வாகிகளை எச்சரித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு சீல்