ETV Bharat / state

சமஸ்கிருதம் நீட் தேர்வாக  உருமாறி வந்திருக்கிறது - கி.வீரமணி - k veeramani says that sanskrit is mutated into neet

கரோனா உருமாறி வருவதைப் போல் சமஸ்கிருதம் நீட் தேர்வாக உருமாறி வந்திருக்கிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

கரோனா உருமாறி வருவதைப் போல் சமஸ்கிருதம் உருமாறி நீட் தேர்வாக வந்திருக்கிறது - கி.வீரமணி  k veeramani says that sanskrit is mutated into neet Tirupattur  Dhiravida party meeting
கரோனா உருமாறி வருவதைப் போல் சமஸ்கிருதம் உருமாறி நீட் தேர்வாக வந்திருக்கிறது - கி.வீரமணி k veeramani says that sanskrit is mutated into neet
author img

By

Published : Apr 23, 2022, 7:05 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு குறித்த பரப்புரைப் பயணக் பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. நாகர்கோவிலில் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கிய இந்தப் பரப்புரை 25ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.22) நடைபெற்றது. அப்போது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில், "கரோனா என்கிற தொற்றை விட கொடியது நீட் தேர்வு. கரோனா நோய் வந்தாலும் தடுப்பூசி போட்டு தப்பித்துக்கொள்ளலாம். நானே இரண்டு முறை பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறேன்.

நூறு வருடங்களுக்கு முன்பு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் மருத்துவர்களாக முடிந்ததா? அப்பொழுதெல்லாம் சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே மருத்துவராக முடியும். மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது திரும்புகிற திசையெல்லாம் நம்முடைய பிள்ளைகள் மருத்துவர்களாக இருக்கின்றனர். பெரியாரும் நீதிக்கட்சியுமே அதற்கு காரணம். கரோனா எப்படி உருமாறி நம்மை தாக்குகிறதோ அதேபோல் சமஸ்கிருதம் நீட் தேர்வாக இப்பொழுது உருமாறி நம்மை தாக்குகிறது.

தேசிய கல்வி கொள்கை வந்துவிட்டால் பழைய குல வழிக் கல்வியை வலியுறுத்துவதாக அமைந்துவிடும். 3ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வரை அனைவருக்கும் பொதுத்தேர்வு என்றால் எப்படி படிக்க முடியும்.

கல்வியை பாதியில் நிறுத்திவிட்டால் பெற்றோர் தொழிலைச் செய்வதற்குத் தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ஒரே தலைவர் தந்தை பெரியார், அவர் குரலுக்கு செவிசாய்த்து திருப்பத்தை ஏற்படுத்தியவர் பச்சை தமிழர் காமராஜர்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இதில் மாவட்ட திக பொறுப்பாளர் எழில், விசிக மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், திமுக வை சார்ந்த நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திராவிட மாடல் குறித்து உலகம் முழுவதும் ஆய்வு - கி.வீரமணி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.