திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த அபிகிரிப்பட்டரை கிராம வனப்பகுதியையொட்டி 50-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு முறையான சாலை வசதியில்லாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியைச்சேர்ந்த சிவா என்பவரது மகன் அர்ஜூன் (12) பாம்பு கடித்திருந்த நிலையில் மருத்துவமனைக்குக்கொண்டு செல்ல காலதாமதம் ஆனது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மாணவனின் உடலை அவரது உறவினர்கள் டோலி கட்டி 3 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் முறையான தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உள்ளிட்ட அலுவலர்கள் அபிகிரிப்பட்டரைப் பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று இருளர் இன குடியிருப்புப்பகுதியில் சாலை அமைக்க ஆய்வு செய்து, சிறுவனின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இதையும் படிங்க:'நீங்க வரியை உயர்த்திட்டு, மத்திய அரசு மீது பழிபோடுறீங்க': நிர்மலா சீதாராமன் ஆவேசம்