ETV Bharat / state

வாத்து மேய்ந்ததில் தகராறு.. இளைஞரை வெட்டிக் கொன்ற முதியவர் கைது! - Murder cases in Thiruppattur

Tirupattur Murder Case: திருப்பத்தூர் அருகே வாத்து மேய்ந்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த 65 முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 7:43 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஏ.கே.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (32). இவர், டைல்ஸ் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி யமுனா என்ற மனைவி மற்றும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் இவரது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் வெங்கடேசன் (65) என்பவர் மது பழக்கத்திற்கும் கஞ்சா போதைக்கும் அடிமையானவர் எனவும், இவர் சில சமயங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெங்கடேசனின் மனைவி வீட்டில் தங்குவது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிலம்பரசன் வளர்த்து வரும் வாத்துகள் அவ்வப்போது வெங்கடேசன் வீட்டு அருகே சென்று இறை தேடும் பொழுது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல இறை தேடச் சென்ற வாத்து ஒன்று வெங்கடேசன் வீட்டு அருகாமையில் இருக்கும் கிணற்றில் விழுந்த நிலையில், சிலம்பரசன் அதை எடுக்கச் சென்றுள்ளார். சிலம்பரசனை கழுத்திலும், தலைப் பகுதியிலும் வெங்கடேசன் சரமாரியாகக் கத்தியால் வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சிலம்பரசன் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர், சிலம்பரசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருடும்போது கூட்டாளியை தனியாக தவிக்க விட்டு தப்பிய இளைஞர் - வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.