உலகமெங்கும் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகமெங்கும் திரையரங்குகள் மால்கள் தற்காலிகமாக மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கச்சேரி ரோடு பகுதியில் இயங்கிவரும் சிவாஜி, விஜய் ஆகிய திரையரங்குகள் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூட வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரையரங்கு வாசலில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.