ETV Bharat / state

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்ட மோசடி: 4 வாரத்திற்குள் ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு

திருப்பத்தூர்: பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் நடந்த மோசடியால் வீடு இன்றி, குடிசை வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் மனநலம் பாதித்த பெண் உயிரிழந்தது தொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியர் 4 வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Human Rights Commission Ordered District Collector for give Explanation

author img

By

Published : Jul 16, 2020, 1:25 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புருஷோத்தம குப்பம் கிராமத்தில் அய்யம்மாள் என்பவர் தனது மகனுடன் வசித்து வந்தார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டதாகக் கணக்கு எழுதி அய்யம்மாலுக்கு சேர வேண்டிய பணத்தை அலுவலர்கள் வழங்காததால் அய்யம்மாள் குடிசை வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், ஜூலை 9ஆம் தேதி இரவு பெய்த மழையில் குடிசையின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அய்யம்மாளுக்குக் கடந்த 2017-18ஆம் ஆண்டுகளில் வீடு ஒதுக்கப்பட்டதாகவும், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அலுவலர்கள் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து (suo-moto) வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், இச்சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் மலைப் பாம்புகள் - பொதுமக்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.