திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எரிப்பகுதியிலிருந்து சண்டியூர் வரையில் விடப்பட்டு இருந்த புறவழிச்சாலை பணிகள், சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதற்காக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மின் கம்பத்தோடு மழை நீர் கால்வாய் சேர்த்து கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கழிவுநீர் கால்வாயில் மின்கம்பம் கட்டுவதும்; அதே நேரத்தில் மழை நீர் கால்வாயுடன் போர்வெல் அப்புறப்படுத்தாமல் கட்டுவதும் போன்ற சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாட்றம்பள்ளியில் தற்போது புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அதற்கான மழைநீர் கால்வாயுடன் மின் கம்பத்தைச்சேர்த்து கட்டப்படுவது சர்ச்சைக்குரியதாக உள்ளது. எனவே, ஒப்பந்ததாரர் மீது இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காலிக்குடங்களுடன் வாலாஜாபேட்டையில் பொதுமக்கள் சாலைமறியல்