ETV Bharat / state

30 அடி உயரம் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 இளைஞர்கள் - Vellore Government Hospital

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்ற 2 இளைஞர்கள் 30 அடி உயரமுள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

30 அடி உயரம் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 இளைஞர்கள்

author img

By

Published : Aug 29, 2022, 9:41 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சமீர், ஆப்தாப், முதசீர் மற்றும் நியூடில்லி பகுதியை சேர்ந்த ஆபீத் ஆகிய 4 பேர் நேற்று (ஆகஸ்ட் 28) ஒரே இருசக்கர வாகனத்தில் ஏலகிரி மலைக்கு சுற்றுலாவுக்காக புறப்பட்டுள்ளனர். வழியில் மழை பெய்ததால் மீண்டும் வாணியம்பாடி திரும்பினர்.

அப்போது வாணியம்பாடி புதூர் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் படுகாயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த ஆப்தாப் மற்றும் முதசீர் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரள இளைஞர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.