திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கோடியூர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் அரசின் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் திமுக மாவட்டச் செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான தேவராஜ் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்போது மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி, நகரப் பொறுப்பாளர் அன்பழகன், அவைத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இவ்விழாவில் தேவராஜ் பேசியதாவது, "கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஐந்து லட்சம் கோடிக்கும் மேலான பணத்தைச் சுரண்டிக்கொண்டு போய்விட்டார்கள். ஆதலால் கஜானா காலியாக உள்ளது. நீங்களெல்லாம் பொங்கலுக்கு எதிர்பார்த்த 1,000 ரூபாயை இப்பொழுது கொடுக்கவில்லை என்றாலும் வரும் நாள்களில் கண்டிப்பாகக் கொடுப்போம்.
புதிய வரிகளைப் போடாமல் பழைய வழியிலேயே அரசு நிர்வாகம் செய்துகொண்டிருக்கிறது. தற்பொழுது உள்ள நோய்த் தொற்று காலகட்டத்தில் மக்களின் நலன் மீது மட்டுமே கவனம் செலுத்திவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை அபிராமி அஜித் பங்கேற்பு