ETV Bharat / state

அரசு பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் பகுதி நேரமாக செயல்படும் அவலம்!

போதிய வகுப்பறைகள் இல்லாததால் பகுதி நேர பள்ளியாக செயல்படும் அரசு பள்ளி குப்பைகள் கொட்டும் இடத்தில் புத்தகபையை வைத்து கல்வி பயிலும் தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்களின் அவலநிலை, திரும்பி பார்க்குமா பள்ளிக்கல்வித்துறை.

அரசு பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் பகுதி நேரமாக செயல்படும் அவலம்

author img

By

Published : Nov 19, 2022, 6:30 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2013 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண் மற்றும் பெண் இருபாலர் என மொத்தம் 1300 மாணவர்கள் பயின்று மாவடத்திலேயே அதிக மாணவர்கள் பயிலும் அரசு பள்ளியாக உள்ளது. இப்பள்ளியில் ஆம்பூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராம பகுதியிலிருந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனி கட்டிடம் அமைத்து மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், ஏற்கனவே உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு இடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு மாற்று கட்டிடம் தற்போது வரை கட்டப்படாத நிலையில், 6 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை முதல் பிற்பகல் வரை அரசு துவக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் கல்வி பயின்று பிற்பகலுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 8 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பிற்பகல் முதல் மாலை கூடுதல் பள்ளி கட்டிடத்தில் உள்ள வகுப்பறையில் மற்ற வகுப்பு மாணவர்களுடன் போதிய இட வசதியில்லாமல் நெருக்கடியுடன் கல்வி பயின்று வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படிகிறது.

பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கழிவறை வசதிகள் ஏதும் இல்லாததால் திறந்த வெளியிலேயே கல்வி பயின்று, தங்களது புத்தகப்பைகளை குப்பைகள் கொட்டும் இடத்தில் வைத்து கல்வி பயிலும் அவல நிலை நிலவுகிறது.

இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இதுவரையில் நியமிக்கப்படவில்லையெனவும், 1300 மாணவர்களுக்கு 26 ஆசிரியர்களே பணியில் உள்ளதாகவும், தற்போது போதிய கட்டிட வசதி இல்லாததால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கட்டிடம் இடிக்கப்பட்டு 6 மாதம் காலம் ஆகியும் இதுவரையில் அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளி கட்டிடம் இருந்த இடம் கால்நடைகள் கட்டி வைக்கும் இடமாக மாறியுள்ளது.

தற்போது இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக இதுகுறித்து மாவட்ட பள்ளி கல்விதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் பகுதி நேரமாக செயல்படும் அவலம்

இதையும் படிங்க: முறைகேடு புகார் எதிரொலி.. பெரியார் பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.