திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அடுத்த டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி முனியம்மாள் (55), இவருடைய மகளான பூவிழிக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் நிரஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நாட்டறம்பள்ளி அருகே புத்துக்கோயில் அமைந்துள்ளது. இருவரும் அங்குள்ள நாகாலம்மன் கோயிலுக்கு பொங்கல் வைத்து விட்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் வீடு திரும்பும் நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. பின்னர் பார்த்தபோது முனியம்மாளின் பேத்தி நிரஞ்சனா அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச்செயின் திருடு போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சடைந்த முனியம்மாள், அங்கிருந்து அழுது கொண்டே நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றார். பின்னர் சம்பவம் நடந்த இடம் அம்பலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லை என்பதால் போலீசார் அவரை சமாதானப்படுத்தி அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!