ETV Bharat / state

பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! - கெங்கையம்மன் கோயில்

திருப்பத்தூர்: ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கரோனா பாதுகாப்புடன் கலந்துகொண்டனர்.

விமரிசையாக நடைபெற்ற திருவிழா
விமரிசையாக நடைபெற்ற திருவிழா
author img

By

Published : Dec 23, 2020, 6:51 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியில் 200ஆண்டுகள் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. வருடா வருடம் மார்கழி மாதம் கோயில் பரம்பரை அறங்காவலர் பத்மநாபன் ரெட்டியார் குடும்பத்தினர், கெங்கையம்மன் ஆலய விழா கமிட்டி குழு சார்பில் 40 அடி உயர தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

இந்நிலையில், இந்தாண்டு கரோனா ஊரடங்கால் தேர் திருவிழா எளிமையான முறையில் கொண்டாடபட்டது. தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மனுக்கு காலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

விமரிசையாக நடைபெற்ற திருவிழா

மேலும், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற காவடி எடுத்தும், சாமிக்கு உப்பு, மிளகு போட்டும், கிடா வெட்டியும் கொண்டாடினர். இதில், பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: கோயில் திருவிழாவிற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.