ETV Bharat / state

வாணியம்பாடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது!

வாணியம்பாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைதுசெய்துள்ள காவல் துறை அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல்செய்துள்ளது.

four-arrested-for-ganja-selling-in-vaniyambadi
வாணியம்பாடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
author img

By

Published : Oct 4, 2021, 11:03 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுவருவதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் பெருமாள்பேட்டை மேம்பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நால்வர் காவல் துறையினரைப் பார்த்ததும் தப்பியோடியுள்ளனர்.

அவர்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரணை செய்ததில், ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான் பாஷா, கோனாமேடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், திருப்பதி, அம்பலூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜன் ஆகிய நான்கு பேர் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர், அவர்களிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்திச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நண்பனை ஓட ஓட வெட்டிக் கொன்றவர் காவல் நிலையத்தில் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.