ETV Bharat / state

வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு - திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளரை நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடியுள்ளார்.

Firing on the forest Ranger
Firing on the forest Ranger
author img

By

Published : Jul 20, 2020, 1:34 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த காவலூர், வசந்தபுரம் காப்புக்காட்டில் ஆலங்காயம் வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நாட்டுத் துப்பாக்கி வைத்துக்கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அவரை வனக்காப்பாளர் முரளி பிடிக்க முயன்றபோது நாட்டுத் துப்பாக்கியால் முரளியை சுட்டுவிட்டு அவர் தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்த முரளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து காவலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்த அடையாளம் தெரியாத நபரை தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.