திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடப்புதுபட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலு (70). இவர் அதேபகுதியில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இந்நிலையில் தனது நான்கு பசு மாடுகளையும் மேய்ச்சலுக்காக, தனது நிலத்தில் விட்டுள்ளார்.
ஆப்போது ஒரு பசுமாடு, அருகிலிருந்து 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் சுமார் 3 மணி நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர். இதையடுத்து மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ரப்பர் விவசாயத்தையும் விட்டுவைக்காத கரோனா - அரசிடம் உதவி கேட்கும் விவசாயிகள்